`பார்' ஊழியர்கள் 2 பேர் கைது


`பார் ஊழியர்கள் 2 பேர் கைது
x

டாஸ்மாக் விற்பனையாளரை மிரட்டிய `பார்' ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் பேட்டை செக்கடியை சேர்ந்த முத்தையா என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். அந்த டாஸ்மாக் கடையின் மேல் மாடியில் `பார்' உள்ளது. இந்த பாரில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் இசக்கிபாண்டி (வயது 32), கருப்பசாமி மகன் பேச்சிமுத்து (30) ஆகியோர் ஊழியராக பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலையில் இசக்கிபாண்டி, பேச்சிமுத்து ஆகியோர் சேர்ந்து டாஸ்மாக் விற்பனையாளரான முத்தையாவிடம் நாங்கள் தான் பீர் விற்பனை செய்வோம். நீங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த இசக்கிபாண்டி, பேச்சிமுத்து ஆகியோர் சேர்ந்து முத்தையாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் முத்தையா டாஸ்மாக் கடையை அடைத்துவிட்டு நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிபாண்டி, பேச்சிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.


Next Story