கும்மிடிப்பூண்டி அருகே பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ்காரர்கள் 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே பெட்டி கடைகளில் ஆய்வு செய்து பணம் கேட்டு மிரட்டிய 2 போலி போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று 2 பேர் தங்களை போலீசார் என கூறிக்கொண்டு குட்கா போன்ற பொருட்கள் விற்கப்படுகி்றதா? என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கடைகாரர்களை மிரட்டி பணமும் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தேகம் ஏற்பட்ட நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் என கூறி மிரட்டலில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி அடுத்த கோரிமேட்டை சேர்ந்த சதீஷ் (வயது 38), ரெட்டம்பேட்டையை சேர்ந்த ரமேஷ் (35) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story