காவலர் குடியிருப்பில் 2 குடும்பத்தினர் மோதல்


காவலர் குடியிருப்பில் 2 குடும்பத்தினர் மோதல்
x

காவலர் குடியிருப்பில் 2 குடும்பத்தினர் மோதலில் ஈடுபட்டனர்.

திருச்சி

காவலர் குடியிருப்பு

திருச்சி பாலக்கரை மார்சிங்பேட்டையில் காவலர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு, பவானி பிளாக்கில் பாலக்கரை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பத்மநாதனும், ரோஸ் பிளாக்கில் பொன்மலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் செல்வகுமாரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இதில் பத்மநாதனின் மனைவி பத்மாவுக்கும் (வயது 44), செல்வகுமாரின் மனைவி மாலதிக்கும் (42) நகை கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் பத்மா குடும்பத்துடன், அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

கைகலப்பு

அப்போது, அங்கு வந்த மாலதி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், பத்மா குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இரு குடும்பத்தினரும் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து 2 சப்-இன்ஸ்பெக்டர்களின் மனைவிகளும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் என்று 9 பேர் மீது பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story