விஷம் கலந்து கொடுத்து 2 பெண் குழந்தைகள் கொலை-தாய்க்கு தீவிர சிகிச்சை


தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 பெண் குழந்தைகளை கொன்ற பெண் தானும் அதே குளிர்பானத்தை குடித்து விட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 பெண் குழந்தைகளை கொன்ற பெண் தானும் அதே குளிர்பானத்தை குடித்து விட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்பம்

ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மனைவி ஜமுனா (வயது 32). இவர்களுக்கு யாஷிகா (4), யோகிதா (1½) என 2 மகள்கள்.,

ஜமுனா ஒன்றரை ஆண்டுகள் காலமாக தனது கணவருடன் பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த ஜமுனா தனது 2 குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து விட்டார்.

இதில் யாஷிகா, யோகிதா 2 பேரும் இறந்து விட்டனர். ஜமுனா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட ஆக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜமுனாவை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் 2 குழந்தைளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆம்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




Next Story