கஞ்சா வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கஞ்சா வியாபாரிகள் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தீபம் நகரை சேர்ந்த பாஸ்கர் மகன் பிரசன்னா மற்றும் திருபுவனம் கன்னித்தோப்பு தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் வாசன் ஆகிய 2 பேரும் திருபுவனம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மற்றும் திருவிடைமருதூர் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிரசன்னா, வாசன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story