பெண்ணாடம் அருகேவிவசாயி வீட்டில் 2 ஆடுகள் திருட்டுகண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீஸ் விசாரணை


பெண்ணாடம் அருகேவிவசாயி வீட்டில் 2 ஆடுகள் திருட்டுகண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே விவசாயி வீட்டில் 2 ஆடுகளை திருடியவா்கள் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்


பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த காரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 42). விவசாயி. இவர் 7 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல வீட்டின் வாசலில் ஆடு, மாடுகளை கட்டியிருந்தார்.

நேற்றுகாலை எழுந்து பார்த்த போது, 2 ஆடுகளை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும், ஆடுகள் கிடைக்கவில்லை. இதையடுத்து, அந்த பகுதியில் ஒருவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை சங்கர் பார்த்தார்.

அதில், நள்ளிரவு 1.50 மணிக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்து, 2 ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சங்கர், பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவானவர்களின் விவரம் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story