கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு
x

கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே இலைகடி விடுதி கிராமத்தை சேர்ந்தவர் பூரணம். விவசாயி. இவருக்கு சொந்தமான 2 ஆடுகள் அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் விழுந்துவிட்டது. இதுகுறித்து அவர் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அங்கிருந்து கிடைத்த தகவலின் பேரில் கறம்பக்குடி தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி 2 ஆடுகளையும் உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அந்த ஆடுகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story