வந்தவாசி அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 40 பேர் காயம்


வந்தவாசி அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 40 பேர் காயம்
x

வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கூட்டுச் சாலையில் 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 40 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை:

சென்னையிலிருந்து மேல்மருவத்தூர், வந்தவாசி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை வந்தவாசியைச் சேர்ந்த அண்ணாமலை ஓட்டினார்.

வேலூரிலிருந்து வந்தவாசி வழியாக மேல்மருவத்தூர் செல்லும் மற்றொரு அரசுப் பேருந்து எதிரே வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டினார்.

கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகே இந்த 2 அரசுப் பேருந்துகளும் ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இதில் 2 பேருந்துகளின் முன்பக்கமும் சேதமடைந்தன. இந்த விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 40 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் மற்றும் வந்தவாசி தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களில் 10 பேர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், திமுக நகரச் செயலாளர் தயாளன் மற்றும் பலர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story