குட்கா கடத்திய 2 பேர் கைது


குட்கா கடத்திய 2 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 60 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் என கூறப்படுகிறது. மேலும் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் (வயது 29), மகிபால் சிங் (27) ஆகிய இருவரும் விற்பனைக்காக சேலத்திற்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, குட்கா பொருட்களை மோட்டர் சைக்கிளுடன் போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story