2 பேருக்கு டெங்கு காய்ச்சல்


2 பேருக்கு டெங்கு காய்ச்சல்
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சலால் பாதிப்பு...

மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் கொசுக்களால் பரவும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

அதையடுத்து தமிழக சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

2 பேருக்கு டெங்கு

இதனால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் 13 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்ட 2 பேருக்கும் தனி வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இருவரும் நலமுடன் உள்ளதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் ஆஸ்பத்திரி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story