சிங்கம்புணரி பகுதியில் 2 மணி நேரம் கனமழை


சிங்கம்புணரி பகுதியில் 2 மணி நேரம் கனமழை
x

சிங்கம்புணரி பகுதியில் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். மேலும் இரவு நேரம் வெப்பம் தணியாமல் தூக்கம் இன்றி பொதுமக்கள் தவித்து வந்தனர் இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு சிங்கம்புணரி பகுதியில் பெய்ய தொடங்கிய மழை 7 மணி வரை கொட்டி தீர்த்தது. சிங்கம்புணரி நகரின் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பேரூராட்சி நிர்வாகத்தால் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு இருந்ததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் உடனடியாக வடிகால் மூலம் வடிந்து சாலை சீரானது. அ.காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், மருதிப்பட்டி, பிரான்மலை, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கைபட்டி, காப்பாரப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள கிராமங்கள் முழுவதும் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. மேலும் விவசாய பணிகள் தொடங்கிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story