சாலை விபத்தில் 2 பேர் காயம்


சாலை விபத்தில் 2 பேர் காயம்
x

சாலை விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அடுத்த சேங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ரகுபதி (வயது 30), சதீஷ்குமார் (30). நண்பர்களான 2 பேரும், ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தமாக சேங்கல் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மதுக்கரை சாலையில் சங்கரன்மலைப்பட்டி அருகே சென்றபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story