சுற்றுலா வேன் மோதி 2 பேர் படுகாயம்


சுற்றுலா வேன் மோதி 2 பேர் படுகாயம்
x

கொடைக்கானலில் சுற்றுலா வேன் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு அருகே உள்ள வடகரைபாறை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (52). நேற்று காலை இவர்கள் 2 பேரும், கொடைக்கானல் செண்பகனூர் அருங்காட்சியகம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும், சாலையில் விழுந்தனர்.

அந்த சமயத்தில் பின்னால் வந்த சுற்றுலா வேன், அவர்கள் 2 பேர் மீது மோதியது. இந்த விபத்தில் ரமேஷ், சுதாகர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து, மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சுற்றுலா வேன் டிரைவர் மொக்கைசாமியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story