2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x

மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருவாரூர்

மன்னார்குடி:

மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு

மன்னார்குடியை அடுத்த பாமணி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அங்குள்ள சிவன் கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசில் விக்னேஷ் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதாக பாமணி பகுதியை சேர்ந்த காளிதாஸ் (26) மற்றும் பாமணி உள்ளூர் வட்டம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (22) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர்.

3 ஆண்டு சிறை தண்டனை

இதுதொடர்பான வழக்கு மன்னார்குடி குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.அப்போது, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட காளிதாஸ் மற்றும் மகேஸ்வரன் ஆகிய இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அமர்தீன் தீர்ப்பளித்தார். இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.


Next Story