உசிலம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
உசிலம்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியாகினர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியாகினர்.
மோட்டார்சைக்கிள் மோதல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டியில் இருந்து தேனி சாலையில் உள்ள தனது ஊரான மாதரைக்கு சென்று கொண்டிருந்தார். மாதரை அருகே உள்ள மகால் அருகில் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த மொக்கையன்(61) என்பவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மணி சென்ற மோட்டார்சைக்கிள் மொக்கையன் மீது மோதியது. இந்த விபத்தில் மணி மற்றும் மொக்கையன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
2 பேர் பலி
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் மொக்கையனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் அங்கு சென்று 2 முதியவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.