கார் கவிழ்ந்து 2 பேர் பலி


கார் கவிழ்ந்து 2 பேர் பலி
x

கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்


கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாமி தரிசனம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). காண்டிராக்டர். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, 2 கார்களில் ஊருக்கு திரும்ப வந்து கொண்டு இருந்தனர்.

இதில் ஒரு காரை ராஜேந்திரனின் உறவினரான, ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் (60) ஓட்டி வந்தார். அந்த காரில் ராஜேந்திரன், அவருடைய மகனும், மத்திய பாதுகாப்பு படை அதிகாரியுமான ரமேஷ் (35), அவருடைய மனைவி செண்பகவள்ளி (32), உறவினர் தமிழ்வாணன் மகள் அட்சயாஸ்ரீ (12) ஆகியோர் இருந்தனர்.

கார் கவிழ்ந்தது

பின்னால் வந்த காரில் மற்ற உறவினர்கள் வந்து கொண்டிருந்தனர். விருதுநகர்-சாத்தூர் இடையே பட்டம்புதூர் விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்ேபாது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது பக்கம் தடுப்பை தாண்டி கார் பாய்ந்து கவிழ்ந்தது. இதனைக்கண்டு பின்னால் வந்த காரில் இருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்து குறித்து சூலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 பேர் பலி

இந்த விபத்தில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பெருமாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

காரில் இருந்த ரமேஷ், அவருடைய மனைவி செண்பகவள்ளி, சிறுமி அட்சயாஸ்ரீ ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 3 பேருக்கும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story