வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
மதுரையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
கொட்டாம்பட்டி,
மதுரையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
கார் மோதி முதியவர் சாவு
கொட்டாம்பட்டியை அடுத்த கைலம்பட்டி விலக்கு அருகே மதுரை- திருச்சி நான்கு வழி சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்கும்போது திருச்செந்தூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ராஜகணபதியை (வயது 37) கைது செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் விபத்தில் பலியான முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இங்கு ஏன் வந்தார்? என விசாரணை நடக்கிறது.
விவசாயி பலி
சமயநல்லூர் அருகே வயலூர் மூலக்கரையைச் சேர்ந்தவர் பரமசிவம் (65) விவசாயி. இவர் நேற்று வயலூரிலிருந்து அம்மையநாயக்கனூர் செல்வதற்காக மொபட்டில் சென்றார். வாடிப்பட்டி அருகே பழைய தாலுகா அலுவலகம் முன்பு சென்ற போது எதிர்பாராத விதமாக அங்குள்ள சந்தில் இருந்து வெளியே வந்த ெமாபட், இவரது மொபட்டில் மோதியது.
இதில் ெமாபட்டில் இருந்து கீழே விழுந்த பரமசிவம் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மொபட்டில் வந்த போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்பையா(65), அவரது மனைவி ஆகியோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் சேர்வை ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.