கொட்டாம்பட்டி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
கொட்டாம்பட்டி அருகே வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.
மூதாட்டி சாவு
கொட்டாம்பட்டி அருகே உள்ள எம்.வெள்ளாளபட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி பனையம்மாள் (வயது 65). இவர் நேற்று முன்தினம் வயலில் வேலை செய்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பனையம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஒருவர் பலி
கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளபட்டி நான்கு வழி சாலை குமரபட்டி விலக்கு அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு நேரம் என்பதால் அந்த வழியே வந்த வாகனங்கள் வாலிபர் உடல் மீது ஏறியதில் உடல் முழுவதும் சிதைந்தது. இதனால் அவர் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த 2 விபத்துகள் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.