நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்படும்


நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்படும்
x

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்படும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

அரவை தொடக்கம்

திருவலம் அருகே உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவை நேற்று தொடங்கப்பட்டது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கரும்பு அரவையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

2.30 லட்சம் மெட்ரிக் டன்

வேலூர் மாவட்டத்தில் சுமார் 4,234 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு இந்த ஆண்டு அரவை செய்யப்படும். வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நாள் ஒன்றுக்கு 2,500 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்படும். இந்த ஆண்டு மட்டும் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்படும்.

கள்ளக்குறிச்சியில் இருந்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் மற்றும் திருத்தணியில் இருந்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் மற்றும் வேறு இடங்களில் இருந்தும் சுமார் 60 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு வரவழைக்கப்பட்டடு அரவை செய்யப்படும்.

சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை

ஒரு டன் கரும்பு அரவை செய்தால் 95 கிலோ சர்க்கரை கிடைக்கும். வேலூர் சர்க்கரை ஆலையில் இருந்து, சுமார் 2 கோடியே 53 லட்சத்து 21,000 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து, அதில் 1 கோடியே 64 யூனிட் வெளியிடங்களுக்கு வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி அளவு குறைந்து வருவதாக கூறப்படுவதால், அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, கரும்பு சாகுபடியை அதிகரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடிக்கு தேவையான எந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேலும் நவீனப்படுத்தவும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலாண்மை இயக்குனர் மீனா பிரியாதர்ஷினி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜயன். வேலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன். ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.


Next Story