பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2 லட்சம் போனஸ்


பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2 லட்சம் போனஸ்
x

கலவையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2 லட்சம் போனஸ் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

கலவை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் போனஸ் வழங்கும் விழாபால் கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. கலவை பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ், பேரூர் தி.மு.க. செயலாளர் சேதுரவி, அ.தி.மு.க. செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால் கூட்டுறவு சங்க செயலாளர் நடராஜன் வரவேற்றார். திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக் கலந்துகொண்டு 239 நபர்களுக்கு ரூ.2 லட்சம் போனஸ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேலும் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இறந்தால் அவர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளதற்கு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நீலாவதி தண்டபாணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றியக் குழு உறுப்பினர் குப்பன், மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதி மகேந்திரன், பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story