30 வழக்குகளில் ரூ.2¾ லட்சம் அபராதம்


30 வழக்குகளில் ரூ.2¾ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 6 Nov 2022 1:00 AM IST (Updated: 6 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கடந்த மாதத்தில் 30 வழக்குகளில் ரூ.2¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது கடைகளில் கலப்படம், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர்.

மேலும் இதுதொடர்பாக அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்றதாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story