வர்ணம் பூசிவிட்டு பொது கழிவறையை சீரமைத்ததாக ரூ.2½ லட்சம் கையாடல்


வர்ணம் பூசிவிட்டு பொது கழிவறையை சீரமைத்ததாக ரூ.2½ லட்சம் கையாடல்
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வர்ணம் பூசிவிட்டு பொது கழிவறையை சீரமைத்ததாக ரூ.2½ லட்சம் கையாடல் என்று கலெக்டாிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனா்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டா் (பொறுப்பு) ராஜசேகரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 282 மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டா், பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, காலம்தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போது அண்ணாகிராமம் அருகே எய்தனூர் கிராம மக்கள், ஊராட்சிமன்ற உறுப்பினர் ராசாத்திபிரபு தலைமையில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எய்தனூரில் உள்ள பெண்கள் பொது கழிப்பறை நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்தது. இதனால் அதை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்ததால், மறுசீரமைப்புக்காக ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மறுசீரமைப்பு என்ற போர்வையில் கட்டிடத்திற்கு வர்ணம் மட்டும் பூசிவிட்டு, பணத்தை கையாடல் செய்து விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெண்கள் பொது கழிவறை கட்டிடத்தை பார்வையிட்டு, கழிவறையை மறுசீரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story