வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்


வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
x

பாதுகாப்பு கேட்டு வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.

ஈரோடு

கடத்தூர்

பாதுகாப்பு கேட்டு வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.

மேற்பார்வையாளர்

கோபி அருகே உள்ள நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பண்ணன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இதேபோல் கோபி அருகே உள்ள மீன் கிணறு பகுதியை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகள் காவ்யா (19). இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பார்ம் படித்து வருகிறார். சக்திவேலும், காவ்யாவும் உறவினர்கள். இதனால் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களுடைய காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி பாரியூர் அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சக்திவேல் வீட்டுக்கு காவ்யா அனுப்பி வைக்கப்பட்டார்.

மெக்கானிக்

இதேபோல் கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூரை சேர்ந்தவர் முருகன். இவருைடய மகன் கோபாலகிருஷ்ணன் (26). இவர் டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். கோபி அருகே உள்ள அருவம்கொரையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகள் அர்ச்சனா (23). பி.ஏ. பட்டதாரி.

கோபாலகிருஷ்ணனும், அர்ச்சனாவும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு ெதரிவித்ததால், காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி கொளப்பலூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர். 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் கோபாலகிருஷ்ணனின் வீட்டுக்கு அர்ச்சனா அழைத்துச் செல்லப்பட்டார்.


Next Story