கருணாநிதி உருவப்படத்திற்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை


கருணாநிதி உருவப்படத்திற்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை
x

திருப்பத்தூரில் கருணாநிதி உருவப்படத்திற்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே மற்றும் நகராட்சி அலுவலகத்தில் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் டி.கே.மோகன், அ.சம்பத்குமார், நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருணாநிதி உருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ., ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் அரசு, டி.ரகுநாத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், நகராட்சி கவுன்சிலர்கள் இ.அய்யப்பன், பி.பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகராட்சி துணைத் தலைவர் சபியுல்லா நன்றி கூறினார்.


Next Story