நர்சிடம் தங்கச்சங்கிலி பறித்த வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்


நர்சிடம் தங்கச்சங்கிலி பறித்த வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்
x

நர்சிடம் தங்கச்சங்கிலி பறித்த வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்.

திருச்சி

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சியை அடுத்த செவல்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மே மாதம் பணியில் இருந்த கர்ப்பிணி நர்ஸ் நந்தினியிடம், மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 6¼ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி, இந்த வழக்கில் ஆலம்பட்டியை சேர்ந்த சின்னு(வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி சங்கிலியாண்ட புரம் பகுதியை சேர்ந்த விஜய்(25), ஹரிபிரசாத்(20) ஆகிய 2 பேர் ஏற்கனவே வேறொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைடுத்து கோர்ட்டில் அனுமதி பெற்று, 2 பேரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்திய துவரங்குறிச்சி போலீசார், மீண்டும் 2 ேபரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story