பால் வியாபாரி கொலையில் மேலும் 2 பேர் கைது


பால் வியாபாரி கொலையில் மேலும் 2 பேர் கைது
x

பால் வியாபாரி கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து பாண்டியன் என்ற ராசு (வயது 62). பால் வியாபாரி. இவர் முன்விரோதம் காரணமாக சேரன்மாதேவி காந்தி பூங்கா அருகில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேரன்மாதேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த செல்வம் (23), அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன் (20), சேரன்மாதேவி விவேகானந்த தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரிராஜ் என்ற ராசுக்குட்டி (23), சுப்பையா என்ற சூர்யா (20) ஆகிய 2 பேரை சேரன்மாதேவி போலீசார் கைது செய்தனர்.


Next Story