தம்பதியை கடத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது


தம்பதியை   கடத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது
x

தம்பதியை கடத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆபிஸர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சந்திரா. சென்னையில் நிலம் ஒன்றை பார்ப்பதற்காக காரில் சென்ற தம்பதியை கும்பல் ஒன்று கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டி நீண்ட நேரத்திற்கு பின்னர் விடுவித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட காளிதாஸ் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் காளிதாஸ் தங்க வீடு கொடுத்து அடைக்கலம் கொடுத்த தொப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜகோபால் (வயது 46), அசோக்குமார்(56) ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story