போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்தவர் உள்பட மேலும் 2 பேர் கைது
கனியாமூர் கலவர வழக்கு போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்தவர் உள்பட மேலும் 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி
கலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்து பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.
இதைத்தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, அங்கு நிறுத்தி இருந்த வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
2 பேர் கைது
இந்த கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி கலவரம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதரமாக கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் கனியாமூர் கலவரத்தின் போது பாதுகாப்பு பணிக்கு வந்த போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்த சின்னசேலம் தாலுகா தொட்டியம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் மணி(வயது 44) மற்றும் கல்வீசி தாக்கிய உலகங்காத்தான் இந்திரா நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் சரண்ராஜ்(34) ஆகிய இருவரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.