சிறுவன் உள்பட மேலும் 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய வழக்கு: சிறுவன் உள்பட மேலும் 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்தவழியாக லாரியில் கடத்தி வரப்பட்ட 16 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் கிளியூர் கிராமத்தை சேர்ந்த ரகோத்தமன்(27) என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்(24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story