திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் மேலும் 2 பெண்கள் கைது
திரைப்பட இயக்குனர் கொலை வழக்கில் மேலும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் அப்துல் ரகுமானை கொலை செய்த வழக்கில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே அபினாஷ், நவீன், பிரேம் ஆனந்த், அவரது மனைவி ரமணி, மற்றொரு நவீன் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகியோரை கைது செய்து, அதில் 5 பேரை சிறையிலும், சிறுவனை இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக சரவணன், தன்ராஜ் ஆகிய 2 பேர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் திரைப்பட இயக்குனர் அப்துல் ரகுமான் கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை சேர்ந்த மணியின் மகள் ரேவதி (வயது 33), ஏற்கனவே கோர்ட்டில் சரணடைந்த சரவணனின் காதலி என்று கூறப்படும் நீலகிரியை சேர்ந்த பெருமாள் மகள் நித்யா (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.