வீட்டின் முன் நிறுத்தி இருந்த 2 மோட்டார்சைக்கிள்கள் எரிப்பு


வீட்டின் முன் நிறுத்தி இருந்த 2 மோட்டார்சைக்கிள்கள் எரிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த 2 மோட்டார்சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் இக்பால் நகர் ரையான் பள்ளிவாசல் தெருவை சோ்ந்தவா் காஜா மைதீன் மகன் முகமது ஜமீர் (வயது 28). ஈரோட்டில் வேலை செய்து வருகிறாா். இவர் கடந்த 3-ந்தேதி ரூ.3 லட்சம் மதிப்புள்ள புதிய மோட்டர்சைக்கிளை வாங்கினார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது மோட்டர்சைக்கிளையும், தனது சகோதரி ருக்சானாவின் ஸ்கூட்டர் மோட்டர்சைக்கிளையும் வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார்சைக்கிள்களும் தீப்பற்றி எரிவதை பாா்த்த முகமது ஜமீர், அந்த பகுதியில் உள்ளவா்கள் உதவியுடன் தீயை அணைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ராம் கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story