ரூ.5 லட்சம் மதிப்பில் 2 புதிய மின்மாற்றிகள்


ரூ.5 லட்சம் மதிப்பில் 2 புதிய மின்மாற்றிகள்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் உபகோட்டத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் 2 புதிய மின்மாற்றிகள் தொடக்க விழா நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் தெற்கு பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட வலசை கிராம பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக 2 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழாவிற்கு கடையநல்லூர் மின்வினியோக செயற்பொறியாளர் பிரேமலதா தலைமை தாங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கடையநல்லூர் உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், இளநிலை மின்பொறியாளர் கோமதி, உதவி மின்பொறியாளர் (கட்டுமானம்) முகைதீன் சஞ்சிதா மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story