கஞ்சா விற்ற 2 வடமாநிலத்தவர்கள் கைது
கஞ்சா விற்ற 2 வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் சிலர் கஞ்சா வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சுக்காலியூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த மேற்குவங்க மாநிலம் பர்கானா ஹர்சனாபாத் பகுதியை சேர்ந்த தீனதயாள்சா (வயது 27), தன்மைமண்டல் (31) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story