மாநகராட்சியில் வரி வசூலில் முறைகேடு: 2 அலுவலர்கள் பணி இடைநீக்கம்-ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவு
சேலம் மாநகராட்சியில் வரி வசூலில் முறைகேடு தொடர்பாக, 2 அலுவலர்களை பணி இடைநீக்கம் செய்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சேலம்
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் வரிவசூலராக பணியாற்றியவர் முரளிதரன். இதேபோல் சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் வரிவசூலராக பணியாற்றியவர் சக்திவேல். இவர்கள் 2 பேரும், வரி வசூலில் முறைகேடு செய்ததாக புகார்கள் வந்தன. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து முரளிதரன், சக்திவேல் ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story