2 பேருக்கு கொரோனா தொற்று


2 பேருக்கு கொரோனா தொற்று
x

2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 954 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 661 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 249 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று பெரம்பலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மொத்தம் 44 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 21 பேர், பெண்கள் 23 பேர் ஆவார்கள். இவர்களில் 43 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story