இரும்பு பக்கெட்கள் திருடிய 2 பேர் கைது


இரும்பு பக்கெட்கள் திருடிய 2 பேர் கைது
x

பள்ளிபாளையம் அருகே இரும்பு பக்கெட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது36) இவர் பொன்லைன் எந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி பொக்லைன் எந்திரங்களை நிறுத்தி வைத்திருந்த இடத்தில் 2 இரும்பு பக்கெட்களை கழட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது 2 இரும்பு பக்கெட்களை காணவில்லை. இது குறித்து மாதேஷ் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை பள்ளிபாளையம் காவேரி பாலம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் (27), அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் ( 26) என்பதும், அவர்கள் 2 பேரும் இரும்பு பக்கெட்களை திருடியதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 2 இரும்பு பக்கெட்கள் மற்றும் மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.


Next Story