மாட்டின் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது
கத்தரி செடியை மேய்ந்ததாக கூறி மாட்டின் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியத்தை அடுத்த வேடநத்தம் பகுதியில் வசித்து வருபவர் கொளஞ்சி மனைவி பொரப்பா(வயது 45). இவரது மாடு அந்த பகுதியை சேர்ந்த தங்கமணி மகன் செந்தில் (42)என்பவரின் வயலில் உள்ள கத்திரி செடியை மேய்ந்ததாக கூறி அவரும், முனிவாழை கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் குமரேசன்(28) ஆகியோர் கொளஞ்சியை திட்டி தாக்கினர். இது குறித்து அவரது மனைவி பொரப்பா கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் மற்றும் குமரேசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story