தம்பதியை தாக்கிய 2 பேர் கைது


தம்பதியை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2023 11:56 PM IST (Updated: 6 Jun 2023 12:39 PM IST)
t-max-icont-min-icon

தம்பதியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள மேல தண்ணீர்பள்ளியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி விஜயலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தண்ணீர்பள்ளி நடைபாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பாலத்தின் வழியாக வந்த கீழதண்ணீர்பள்ளியை சேர்ந்த அஜித் (26), கவுதம் (26), தண்ணீர் பள்ளியைச் சேர்ந்த பாலாஜி (27), அரசகுமார் (46) ஆகிய 4 பேரும் கார்த்திக்கிடம் தகராறு செய்து அவரையும், அவரது மனைவி விஜயலட்சுமியையும் திட்டி தாக்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கார்த்திக்கின் உறவினரான ரஞ்சித்குமார் தகராறு குறித்து கேட்டுள்ளார். பின்னர் தகராறில் ஈடுபட்டவர்கள் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். காயமடைந்த கார்த்திக், விஜயலட்சுமி ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த தகராறு குறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, பாலாஜி, கவுதமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அஜித், அரசகுமாரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story