விவசாயியை தாக்கிய 2 பேர் கைது


விவசாயியை தாக்கிய 2 பேர் கைது
x

தா.பழூர் அருகே விவசாயியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவருடைய மகன் கண்ணபிரான் (வயது 38), விவசாயி. இவரது நிலத்தில் கம்பி வேலி அமைத்துள்ளார். சம்பவத்தன்று அவரது அண்ணன் சத்தியமூர்த்தி (47) மற்றும் அவரது மனைவி அகிலா (37) ஆகியோர் கம்பி வேலியை பிரித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்ணபிரான், சத்தியமூர்த்தி மற்றும் அகிலாவிடம் கேட்டபோது இருவரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கண்ணபிரான் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தி மற்றும் அகிலாவை கைது செய்தார்.


Next Story