விவசாயியை தாக்கிய 2 பேர் கைது
விவசாயியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த வீரமுத்து மகன் பால்ராஜ்(வயது 38). விவசாயியான இவர் சாலை ஓரத்தில் தனக்கு சொந்தமான மொபட், மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தேவதாஸ் மகன் பாலகிருஷ்ணன் (35), கருணாநிதி மகன் கார்த்திக் (21) ஆகியோர் அந்த வழியாக காரில் வந்துள்ளனர். அப்போது அவர்கள், பால்ராஜிடம் ஏன் இருசக்கர வாகனங்களை வழியில் நிறுத்தி உள்ளாய் எனக்கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பால்ராஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story