அனுமதியின்றி பாறையை வெடிவைத்து உடைத்த 2 பேர் கைது
அனுமதியின்றி பாறையை வெடிவைத்து உடைத்த 2 பேர் கைது
கன்னியாகுமரி
குலசேகரம்:
குலசேகரம் அருகே உள்ள காக்கச்சல் பகுதியில் தனியார் ஒருவருக்கு கிணறு வெட்டும் பணி நடந்தது. இந்தப் பணியில் மங்கலம், செக்குமூடு பகுதியைச் சேர்ந்த ஜெய தீபராஜ் (வயது 53), குறக்குடியைச் சேர்ந்த ஜெஸ்டின்ராஜ் (45) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் கிணறு வெட்டும் போது பாறை தென்பட்டது. இதனால் டெட்டனேட்டர், வெடிஉப்பு போன்ற வெடிபொருட்களை பயன்படுத்தி பாறையை உடைத்ததாக ெதரிகிறது. இதுகுறித்து வெடிபொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றன. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து அனுமதியின்றி வெடி வைத்து பாறையை உடைத்ததாக ஜெய தீபராஜ், ஜெஸ்டின்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வெடிப்பொருட்களை பறிமுதல் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story