மாநகராட்சி லாரி கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது


மாநகராட்சி லாரி கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
x

மாநகராட்சி லாரி கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

லாரி கண்ணாடி உடைப்பு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து, இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வாகனத்தில் ஏற்றி கோணக்கரை பகுதியில் பட்டியில் அடைத்து வைத்து பராமரித்து வருகிறார்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கால்நடைகளின் உரிமையாளர்கள் உரிமை கோர வராவிட்டால் அந்த கால்நடைகள் ஏலம் விடப்படுகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 வாலிபர்கள் கோணக்கரை பகுதியில் கால்நடைகள் அடைத்து வைத்து இருந்த இடத்துக்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த காவலாளியிடம் மாடுகளை பிடித்தது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது அங்கு நிறுத்தி இருந்த மாநகராட்சி லாரி கண்ணாடியையும் அவர்கள் உடைத்ததாக கூறப்படுகிறது.

2 பேர் கைது

இது குறித்து காவலாளி ஹரிஹரசுதன் கொடுத்த புகாரின்பேரில், 2 பேரையும் உறையூர் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த வினோத் பாரி ஆல்பர்ட் (வயது 31), தென்னூர் ரகுமானியபுரத்தை சேர்ந்த மகதீர்முகமது (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர்.


Next Story