டாஸ்மாக் கடையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது


டாஸ்மாக் கடையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

டாஸ்மாக் கடையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் டாஸ்மாக் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், கோவகுளம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 43) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் பணியில் இருந்தார். அப்போது, அங்கு கத்தி மற்றும் பீர்பாட்டிலுடன் வந்த மகாதானபுரம் பகுதி சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் (39) டிரைவர், பழையஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த தையல்காரர் மனோகரன் (32) ஆகிய 2 பேரும் பாலகிருஷ்ணனை மிரட்டி இலவசமாக மது தரவேண்டும் இல்லையெனில் குத்தி விடுவோம் என மிரட்டி தகராறில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் அங்கு கூடியதால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, வெங்கடேஷ், மனோகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story