வனவிலங்கு வேட்டைக்கு சென்ற 2 பேர் கைது
கடையநல்லூர் அருகே வனவிலங்கு வேட்டையாட சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனவர் முருகேசன், மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன், சிறப்பு பிரிவு வனவர் ரவீந்திரன், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் கடையநல்லூர் சின்னக்காடு பீட் காசிதர்மம் சாலையில் மங்களாபுரம் பறிம்பு மலைப்பகுதியில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலக்கடையநல்லூர் மலம்பட்டை தெருவை சேர்ந்த பால்பாண்டி (வயது 43), கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் தெருவை சேர்ந்த முகமது இஸ்மாயில் மைதீன் (40) ஆகியோர் கையில் அரிவாள், கத்தி, டார்ச் லைட் ஆகியவற்றுடன் வேட்டைக்குச் சென்றனர். 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story