பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது


பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது
x

விருத்தாசலம் அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

கடலூர்

விருத்தாசலம்

ரோந்து பணி

விருத்தாசலம் வனத்துறை அலுவலர் ரகுவரன் தலைமையிலான வனவர் சிவகுமார், வனக்காப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுத பிரியன் ஆகியோர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வண்ணாங்குடிகாடு பகுதியில் உள்ள வனத்துறை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகர் குறவர் காலணியில் வசிக்கும் குமார் (வயது 63), ஆரஞ்சு மகன் விஜயன் (35) என்பது தெரிந்தது.

2 பேர் கைது

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இனப்பெருக்கத்திற்காகவும், இரை தேடியும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன் ஆகிய அரிய வகை பறவைகளை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதும், மேலும் வேட்டையாடுவதற்காக மான்களை தேடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இந்திய வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தக்கூடிய வெடி மருந்துகள், மொபட் வண்டி ஆகியவைகளை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story