பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது


பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது
x

முத்துப்பேட்டை அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவாரூர்

முத்துப்பேட்டை,:

முத்துப்பேட்டை அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கண்காணிப்பு பணி

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வனசரகம் பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க திருச்சி வன மண்டல தலைமை வன பாதுகாவலர் சதிஷ், திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொளி ஆகியோர் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்பேரில் முத்துப்பேட்டையை அடுத்த தொண்டியக்காடு பகுதியில் முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் ஜனனி தலைமையில் வனவர் சண்முகம், வனக்காப்பாளர்கள் கணேசன், சிவனேசன், வன காவலர்கள் பாரதி செல்வன், கேசவன், வேட்டைத்தடுப்பு காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மறித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் தொண்டியக்காட்டை சேர்ந்த தங்கவேல் மகன் ஜெயசீலன் (வயது49), வாடியக்காட்டை சேர்ந்த துரையப்பன் மகன் ராஜேந்திரன் (42) என்பதும், இவர்கள் பறவைகளை வேட்டையாடி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்துவனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயசீலன், ராஜேந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர்களிடம் இருந்து 3 கூழைகிடா பறவைகள், 2 வலைகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story