உடும்பை வேட்டையாடிய 2 பேர் கைது


உடும்பை வேட்டையாடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Feb 2023 7:30 PM GMT (Updated: 2023-02-11T01:00:24+05:30)
சேலம்

கெங்கவல்லி:-

தெடாவூர் வனச்சரகர் சிவகுமார் தலைமையில் வனத்துறையினர் கெங்கவல்லி காப்புக்காட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்த போது, அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த ரஞ்சித், கணேசன் என்பது தெரியவந்தது மேலும் அவர்களின் சாக்குப்பையை பார்த்தபோது உயிருடன் உடும்பு இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் உடும்பை வேட்டையாடிய ரஞ்சித், கணேசன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட உடும்பை மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.


Related Tags :
Next Story