கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x

விக்கிரமசிங்கபுரத்தில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேஷ், தீபா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டவிளைபட்டியில் மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார். போலீசார் விசாரணையில் பிரபு (வயது 41) என்பது தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து விருதுநகர், தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் மற்றும் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் விற்பனைக்காக 3 கிலோ கஞ்சா கொண்டு வந்ததாகவும், பொட்டல்புதூரில் தாய் பசுபதியிடம் (61) கஞ்சா இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து பிரபு, பசுபதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story