போலி டீ தூள் விற்ற 2 பேர் கைது


மதுரையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக டீ தூள் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 400 கிலோ டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை

மதுரையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக டீ தூள் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 400 கிலோ டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலி டீ தூள் விற்பனை

இந்தியாவில் பிரபல டீ தூள் நிறுவனத்தின் விற்பனை நிலவரங்கள், பொருளின் தரம் உள்ளிட்டவை குறித்து கண்காணிக்கும் பணிகளை பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவன பிரதிநிதியான சோமசுந்தரம் என்பவர் மதுரை அனுப்பானடி பகுதியில் அந்த நிறுவனத்தின் டீ தூள் விற்பனை குறைவானது குறித்து நேற்று ஆய்வு செய்ய வந்தார்.

அப்போது அனுப்பானடி சின்னக்கண்மாய் அருகேயுள்ள சிறிய குடோன் ஒன்றில் அந்த பிரபல நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி போலி டீ தூள் தயாரித்து வந்ததையும், அதை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்ததையும் கண்டறிந்தார்.உடனே இது குறித்து அவர் தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்தார்.

2 பேர் கைது

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுப்பானடியை சேர்ந்த விக்னேஷ் குமார் (வயது 33), ஐராவதநல்லூரை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (38) ஆகிய 2 ேபரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 400 கிலோ எடையுள்ள போலி டீ தூள் மற்றும் அது தயாரிப்பதற்கு பயன்படுத்தி வந்த கருவிகளையும் பறிமுதல் செய்தனர். கைதான சவுந்தரபாண்டியன் என்பவர் கடந்த 2021-ல் இதே போன்று போலி டீ தூள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story