கஞ்சா-புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


கஞ்சா-புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா-புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

வெங்கமேடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அமராவதி பாலம் அருகே உள்ள பாலம்மாள்புரம் பகுதியில் தாந்தோணிமலையை சேர்ந்த செல்வராஜ் (வயது 37) என்பவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை வெங்கமேடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் கரூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில் வைத்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக சிவபாலன் (55) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story